Home-1

President Message

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய பெர்மிம் முன்னாள் தலைவர்கள், இணைப்பு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பெர்மிம் துணைத்தலைவர் Tuan ஹாஜி சுல்தான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் பேராளர்கள் அனைவர்களுக்கும் இதயம் கனிந்த ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
பெர்மிமின் 22ஆம் ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மனம் நிறைந்து வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சூரா ஆல இம்ரான் வசனம் 26
(நபியே!) சொல்லுங்கள்:
“அல்லாஹ்வே! அரசாட்சியின் உரிமையாளன்!
அவன் விரும்புகிறவர்களுக்கு அரசாட்சியை அளிக்கிறான்;
அவன் விரும்புகிறவர்களிடமிருந்து அரசாட்சியைப் பறிக்கிறான்;
அவன் விரும்புகிறவர்களை உயர்த்துகிறான்;
அவன் விரும்புகிறவர்களை தாழ்த்துகிறான்.
நன்மை அனைத்தும் உன் கையில்தான் உள்ளது.
நிச்சயமாக நீ அனைத்திற்கும் வல்லவன்.”
சூரா ஆல இம்ரான் வசனம் 54
அவர்கள் திட்டமிட்டார்கள்; அல்லாஹ் திட்டமிட்டான்.
அல்லாஹ் தான் சிறந்த திட்டமிடுபவன்.
எனது தலைமை உரையை  ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்…
👉 கடந்த 52 ஆண்டுகளாக பெர்மிம் (நாம் அனைவரும் தான் பெர்மிம்) இல்லாமல் இருந்திருந்தால்??? —
நமது இந்திய முஸ்லிம் சமுதாயம்  இந்நிலையில் இருந்திருக்குமா?
மாணவர்கள் கல்வி உதவி பெற்றிருப்பார்களா?
சிக்கலில் உள்ள குடும்பங்களுக்கு உதவி கிடைத்திருக்குமா?
அரசாங்கத்தில் நமது குரல் கேட்டிருக்குமா?
👉 பெர்மிம் ஒரு அமைப்பு மட்டும் அல்ல
அது  நமது சமுதாயத்தின் முதுகெலும்பு.
1973 ஆம் ஆண்டு, சில தொலைநோக்கு சிந்தனையாளர்கள் (Dato Seri Iqbal போன்றவர்கள்) ஒரே கனவுடன் பெர்மிமை உருவாக்கினார்கள்:
✔ இந்திய முஸ்லிம்களின் உரிமைகள்
✔ கல்வி உயர்வு
✔ பொருளாதார முன்னேற்றம்
✔ இஸ்லாமிய அடையாள பாதுகாப்பு
அவர்கள் வசதியுடன் ஆரம்பிக்கவில்லை…
ஆனால் உறுதியுடன் ஆரம்பித்தார்கள். semangat இருந்தது.
இன்று நாம் அனுபவிக்கும் வளர்ச்சி — அவர்களின் தியாகத்தின் பலன்.
அதனால் தான் அமைச்சுகள், அரசு நிறுவனங்கள், சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.
👉 நாம் தனித்து விடப்படவில்லை
👉 நாம் இணைந்து பங்களிக்கிறோம்
1️⃣ இஸ்லாம் கொண்டு ஒருங்கிணைவோம்
2️⃣ கல்வியில் மேம்படுவோம்
3️⃣ பொருளாதாரம் & தொழில்துறையில்  வளர்ச்சி அடைவோம்
4️⃣ சமுதாயத்திற்கு பங்களிப்போம்
5️⃣ இந்திய முஸ்லிம் கலாச்சாரத்தை  பாதுகாப்போம்
👉 இவை வெறும் வாசகங்கள் அல்ல
👉 நமது வாழ்க்கை வழிகாட்டிகள்
நமது பெற்றோர்கள் பலர் கல்வி வாய்ப்பு பெறவில்லை.
ஆனால் அவர்கள் ஒரே கனவு கண்டார்கள் —
எங்கள் பிள்ளைகள் உயர வேண்டும்.
அதனால் இன்றைக்கு நாம் டாக்டர்கள், இன்ஜினியர்கள், தொழில்முனைவோர்.
👉 இதுதான் கல்வியின் சக்தி. பெர்மிம் தொடர்ந்து அரசாங்கதில் அல்லது வேற வழியில் நமது மாணவர்களுக்காக  போராடும்
ஒரு சமூகமும் பெண்களை உயர்த்தாமல் உயர முடியாது.
இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களை உயர்த்தியது.
🌷 கத்தீஜா (ரலியல்லாஹு அன்ஹா) – வெற்றிகரமான வணிகவதி
🌷 ஆயிஷா (ரலி) – அறிவின் கடல்
இன்றைய மலேசியாவில்:
✔ கல்வியறிவு பெற்ற தாய்மார்கள்
✔ தொழில் முனைவோர்
✔ தொழில்முறை பெண்கள்
பெர்மிம் பெண்கள் வளர்ச்சிக்காக:
🌸 தலைமை பயிற்சி
🌸 தொழில் வாய்ப்புகள்
🌸 கல்வி ஆதரவு
ஏனெனில் —
பெண்கள் உயர்ந்தால் குடும்பம் உயரும்.
குடும்பம் உயர்ந்தால் சமூகம் உயரும்.
PERMIM-ல் பெண்கள் EXCO அதிகரிக்கபடும்
அன்பு  இளைஞர்களே,
நீங்கள் நாளைய தலைவர் மட்டும் அல்ல —
இன்றைய சக்தி.
பெர்மிம் உங்களை:
🚀 வழிநடத்தும்
📚 பயிற்சி தரும்
🤝 தலைமைக்கு தயார்படுத்தும்
நாளைய பெர்மிம் தலைவர் —
இன்று இங்கே இந்த கூட்டத்தில் இருக்கலாம்.
இதே வார்த்தையை15 வருடம் முன்னாடி belia permim la உள்ளவர்களை பார்த்து Dato Dr Syed Ibrahim & Hj Dhajudeen சொன்னார்கள். Alhamdulilah
இஸ்லாம் வணிகத்தையும் உழைப்பையும் ஊக்குவிக்கிறது.
நமது சமூகம்:
✔ தொழிலதிபர்கள்
✔ தொழில்முறை வல்லுநர்கள்
✔ இளம் தொழில் முனைவோர்
பெர்மிம் தொடர்ந்து பொருளாதார வலிமையை உருவாக்கும்.
(ஆல்இம்ரான் 3:92) “நீங்கள் நேசிப்பதை வழங்காத வரை உண்மையான நற்குணத்தை அடைய முடியாது”
நாம் கொடுப்பது குறையாது
அல்லாஹ் அதிகரிப்பான்
“ஒற்றுமையே உயர்வின் அடிப்படை”
ஆரோக்கியமான போட்டியே வாழ்வின் வெற்றிக்கும் ஒற்றுமைக்கும் வழி வகுக்கும்.
ஒற்றுமையுடன் வளர்வோம்.
இன்று பெர்மிம்:
👉 60க்கும் மேற்பட்ட சங்கங்களின் தாய் அமைப்பு
நாம் ஒன்றாக இருந்தால் — பலமாக இருப்போம்.
ஒருநாள் நமது பிள்ளைகள் கேட்பார்கள்:
“நீங்கள் சமூகத்திற்காக என்ன செய்தீர்கள்?”
அப்போது பெருமையுடன் சொல்லுவோம்:
பெர்மிம் மூலம் எதிர்காலத்தை கட்டினோம்
இது வரை நடந்த நம் பணிகளின் அனைத்தும் வெளிப்படைத்தன்மை, நேர்மை, பொறுப்புணர்வு
என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு நடந்து கொண்டு வருகிறது. இனி வரும் காலங்களில் அது தொடர்ந்து கடைபிடிக்கு படும். இறைவன் நம்மை நேரான பாதையில் நடத்தட்டும்.InshaAllah
ஈமானில் உறுதியும்
ஈருலக நம்பிக்கையும்
அதிகமான பொறுமையும் இருந்தாலே
ஆட்கொள்ளலாம் உலகை
கவலை விட்டு தள்ளுவோம்
காரியத்தில் கருத்தாய் இருப்போம்
பொறுமை காப்போம்
பொறுத்தாரே பூமி ஆள்வார்
பொறுமை காத்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே குரலாக பெர்மிம் மட்டுமே தாய் சபை என்று சமுதாய நலனில் அக்கரை கொள்வோம்.
 இந்த தருணத்தில் நாம் அனைவரும் சகேதரர் ஷேக் பாரிட் க்கு தோள் கொடுத்து அவருக்கு அல்லாஹ் பொருமையை கொடுக்க துவாச் செய்வோம், ஆமின்

PERMIM Song

History of PERMIM

Permim_2023-crop

About PERMIM

PERMIM was established in 1973.It is part of an Umbrella body of 40 affiliates (Associations) from all around Malaysia. It was recognized by the government as a NGO representative for Indian Muslims.

bhr_2022

How We Help

The aims and objectives of PERMIM are to envisage, organise and carry out activity or activities that aim to promote the religious, social, economic, educational and cultural well-being of its members.

EBR_2023

Education Fund

The establishment of the PERMIM Education Fund Board was very timely, given government’s financial constraints at that time. PERMIM is well positioned to reach out and help the needy and deserving students.

Vision

To be the premier non-governmental organization (NGO) to articulate the aspirations and rights of the Indian Muslim community in Malaysia

Mission

To unite the community by bringing all Indian Muslim Organizations under one umbrella Federation