இளைஞர்களை ஈர்த்த இறுதி நபி ( ஸல் )

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

மக்களெல்லாம் மதிகெட்டு
திரிந்த நேரமதிலே
மனித நேயத்தின் மகான்
பிறந்தார் மண்ணிலே

மக்களை சீர்படுத்தி
நேர்வழி காட்டிடவே
மனித குலத்தின் சான்றாக
வந்துதித்தார் உலகிலே

தந்தை இழந்தார்
மண்ணில் பிறக்கும் முன்பே
தாயையும் இழந்தார்
அறியா பருவம் முடியும் முன்பே

தஞ்சம் புகுந்தார்
பாசமிகு பாட்டனாரின் அரவணைப்பிலே
வாழ்க்கை பாடம் படித்தார்
வழிகாட்டும் சிறிய தந்தையிடமே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

வணிகம் புரிவதில் கைதேர்ந்தார்
வாலிப பருவத்திலே
சாதிக்குல் அமினாய் உயர்வடைந்தார்
சத்திய வாக்கினாலே

எம்பெருமானாரின் புகழ் பரவியது
அவர்களின் நற்செயல்களாலே
அன்னை கதீஜாவின் அன்பு கிடைத்தது
அல்லாஹ்வின் அருளாலே

இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார்
இருபத்தைந்தாம் வயதிலே
எளியோரின் தேவை நிறைவேற்றினார்
ஈகை குணத்தாலே

மக்கள் செல்வம் ஈன்றெடுத்தார்
மனம் நிறைந்த மணவாழ்விலே
சந்தோசம் எங்கும் நிறைந்திருந்தது
சத்திய மகான் வாழ்வுதனிலே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

இறைவனை தேடி வணங்கிட்டார்
ஹீரா குஹையினிலே
நபித்துவம் தானே அடைந்திட்டார்
நாற்பதாம் வயதினிலே

இருளை விலக்கி ஒளியை தந்தார்
அருள்மறை வசனங்களாலே
இறைவனை நெருங்கிட அடியார்களை அரவணைத்தார்
அன்பெனும் ஆயுதத்தாலே

பொய்மை பொறாமை பெருமை
தவிர்த்தார் தனது வாழ்வுதனிலே
தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தார்
தலையாய கடமையாய் அகிலத்திலே

பார் போற்றும் நல்ல தலைவராய்
நபியவர்கள் பவனி வந்ததாலே
அண்ணலாரின் புகழ் மாலை பாடிட
அனுதினமும் மனம் நாடுதே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

மனதார நெருக்கடி உணர்ந்தார்
மனம் நிறைந்த மனைவி இழப்பாலே
பனு காஸிமின் பாதுகாப்பு இழந்தார்
சிறிய தந்தையின் மறைவாலே

மீளா துயரத்திலிருந்து மீண்டெழுந்தார்
விண்ணுலக பயணத்திலே
அருளாளன் அல்லாஹ்வை சந்தித்தார்
அர்ஸ் எனும் அரியணையிலே

ஹிஜ்ரத் என்னும் பயணம் புறப்பட்டார்
அன்சாரிகளின் அழைப்பாலே
சிறப்பான வரவேற்பை பெற்றார்
அன்பான மக்களாலே

மதீனத்து அரசியலமைப்பு அமைத்தார்
அரவணைக்கும் நோக்கிலே
அண்ணலாரின் நற்செயலால் அனைவரும்
இணைந்தனர் இஸ்லாத்தினிலே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

மக்கத்து மாநகரத்தின்
செல்வந்தர் முஸாப்
செல்வமெல்லாம் உதறிவிட்டு
சேர்ந்தாரே இஸ்லாத்திலே

மாநபியின் வழிகாட்டுதலில்
மாமறையை திறம்பட ஓதி
மதீனத்து மக்களுக்கு
தீன்வழியை போதித்தாரே

காபாவின் அருகிலே
இல்லம் பெற்ற அல்-அர்கம்
இஸ்லாத்தில் இணைந்தவர்களில்
முதன்மையான ஒருவரே

இஸ்லாமிய கல்வி போதிக்க
இல்லத்தை தாரை வார்த்து
அழியாத இடம் பெற்றாரே
அண்ணல் நபியின் மனதினிலே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

வாளை ஏந்தியே உமர்
வெட்ட புறப்பட்டாரே
சூரத்துல் தாகாவை செவிமடுத்து
இஸ்லாத்தை ஏற்றாரே

கலீபாவாக வாழ்ந்த காலம்
நல்லாட்சி புரிந்தே
கருணைநபி புகழ் பரப்பி
தரணியிலே வாழ்ந்தாரே

சத்திய தேடல் கொண்ட
இளைஞர் சல்மான் பாரிஸ்
இறைத்தூதர் நேசம் நாடியே
இஸ்லாத்தில் இணைந்தாரே

பகைவர்கள் மதீனாவை அழித்திட
படை திரட்டி வரவே
அகழி அமைத்து பாதுகாத்திட
ஆலோசனை கூறினாரே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

ஆடு மேய்க்கும் இளைஞர்
அப்துல்லா இப்னு மஸூத்
அண்ணலாரின் அதிசய செயல் கண்டு
இஸ்லாத்தை தழுவினாரே

எதிரிகளிடமிருந்து அல்லாஹ்
என்னை பாதுகாப்பான் என்றே கூறி
குறைஷிகளுக்கு மத்தியில்
அர்-ரஹ்மான் சூராவை ஓதினாரே

எத்தனை எத்தனை இளம் ஸஹாபாக்கள்
ஏந்தல் நபி வழியில்
இறுதி நபியால் ஈர்க்கப்பட்டு
இஸ்லாத்திற்கு பணியாற்றினரே

பெருமானார் மீது கொண்ட பேரன்பால்
பெரும்பங்காற்றினரே
எத்தனை காலம் ஆயினும்
இளம் ஸஹாபிகளின் பங்கு அழியாதே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

உறவினர்களோடு ஒட்டி வாழ வேண்டுமென
உம்மி நபி உரைத்தாரே
உயிரினங்களுக்கு இரக்கம் காட்டிடவே
உண்மை நபி விளித்தாரே

தேவைக்கு போக அனைத்தையும்
ஈகை கொடுத்தாரே
தேவையில்லா பேச்சுக்களை வீணே
பேச மாட்டாரே

பகைவரையும் மன்னிக்கும் மனப்பக்குவம்
சொல்லி தந்தாரே
அனைவரையும் அரவணைக்கும் அன்பை
காட்டி சென்றாரே

அண்ணல் நபி காட்டிய அறவழியில்
நாம் செல்வோமே
இன்பமயமான வாழ்வுதனை இனிமேல்
என்றும் காண்போமே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

திருத்தமான அவர் முகம்
பார்த்திட வேண்டுமே
தீர்க்கமான அவர் உரையை
கேட்டிட வேண்டுமே

அல்-அர்கம் இல்லத்திலே நாமெல்லாம்
கூடிட வேண்டுமே
அவர் போதித்த நல்லுபதேசங்களை
செவிமடுத்திட வேண்டுமே

இளைய சமுதாயம் இறுதி நபியால்
ஈர்க்க பட்டோமே
இஸ்லாம் என்னும் நல்வழியில்
இணைந்து பாடுபடுவோமே

உண்மை வழியில் செல்லும்போது
உள்ளம் காயப்படுவோமே
உறுதியான புன்னகை கொண்டு
நாம் சாந்தப்படுவோமே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

இறை பணிவு கொண்ட
இளைய சமுதாயமாக பெயர் எடுப்போமே
இறுதி நபி காட்டி சென்ற
வழியில் நாமும் செல்வோமே

முதியோர்களுக்கு உதவி செய்யும்
இளைஞர்களாக நாமும் விளங்குவோமே
முன்னுதாரணமாய் இருந்த ரசூலை
நினைவு கூர்வோமே

எத்தனை தலைவர்கள் இந்த புவியில்
வந்து சென்ற போதுமே
சொன்ன சொல்லை செயலில் காட்டிய
சீமான் ரசூலின் புகழ் பாடுவோமே

நம்மை ஈர்த்த இறுதி நபியின்
நெருக்கம் பெறுவோமே
நாளும் அவரை நினைவு கூர்ந்து
ஸலவாத் ஓதுவோமே

கவி பாடிட வேண்டும்
இரவோ பகலோ
கண்மணி நாயகம் அவர்களை
கவி பாடிட வேண்டும்

கண் பார்த்திட வேண்டும்
கனவோ நனவோ
கண்மணி நாயகம் அவர்களை
கண் பார்த்திட வேண்டும்

– கலிருஸ்ஸமான்

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*