1957 மலேஷியா சுதந்திரம் அடைந்தது. பல்வேறு இனத்தவர்களும் மலேசியாவின் சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள். அதில் இந்திய முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. செப்டம்பர் 16, 1963 மலேசிய கூட்டமைப்பு நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட ஆறாண்டுகளில் யாரும் எதிர்பாராத துயர சம்பவமாய் மே கலவரம் அமைந்தது. அந்த கருப்பு தினத்திற்கு பிறகு பல்வேறு இனங்களுக்கிடையே பல்வேறு மனமாற்றங்களும் சிந்தனைகளும் தலைதூக்கிக் கொண்டிருந்த கால கட்டம் அது. இங்குள்ள இந்தியா முஸ்லிம்களின் நிலைமை என்ன என்ற கேள்வியும் விவாதங்களும் எல்லா முஸ்லிம் இயக்கங்களிலும் தோன்றிய காலம் அது
Memoirs of the late Dato’ Haji Mohamed Ismail Shariff
Former President of PERMIM (1976-1988)
1. GENESIS OF PERMIM
There was a bread vendor in Taiping. He was a simple man, not of great means. But he had
the interests of the community at heart. He had long felt that there ought to be an umbrella
organization for the community in this country. For some years he had written several
articles in the Tamil language papers in the country about the need for such a body and
talked to various people he thought might embrace the proposal. Like many such proposals
made by persons who are not considered to be consequential by the well-off members of the
community it went unheeded by anyone for many years. But he kept on at it, writing and
speaking to others who might take up the proposal – that was all that was within his limited
power to do. His name was A.E. Mohamed Ibrahim and he wrote under the pen name of
“Thirukim”.
Malaysian Indian Muslim Women High Tea

ஷாஅலமில் அமைந்துள்ள ஹோட்டல் டீ பால்மாவில், மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையின் மகளிர் அணி ஏற்பாடு செய்த இந்திய முஸ்லிம் மகளிர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இந்த நிகழ்வில் மூன்று சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மனநல விழிப்புணர்வு, இஸ்லாமிய சிறப்புரை மற்றும் அடிப்படை ஒப்பனை போன்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்கள். அதுமட்டுமின்றி கலந்து கொண்ட 80 மகளிர்கள்,ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.
பெர்மிமும், டான் ஸ்ரீ எஸ்.ஓ.கே உபைதுல்லாவின் பங்களிப்பும்

நாடு முழுதும், பினாங்கு தென்காசி – கடையநல்லூர் முஸ்லிம் சங்கங்கள் தொடங்கி சிறு சிறு ஜமாத்துக்கள் வரை பல்வேறு பெயர்களில் சிறியதும் பெரியதுமாக பல இயக்கங்கள் உருவெடுத்துவிட்டன. இந்த இயக்கங்களுக்கெல்லாம் ஒரு பாலம் தேவைப்பட்டது. உதிரிகளாகக் கிடக்கும் இந்த முஸ்லிம் அமைப்புகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தால் தான் ஒரு சக்தியை உருவாக்க முடியும் என சிந்தித்தார்கள் படித்த பட்டதாரிகளையும் வணிக சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்ட குழுவினர்.
20th BDC PRESIDENT’S SPEECH
Bismillahirrahmanirrahim
Alhamdulillahi Rabbil Aalameen
Wassalathu Wassalam
Al Ashrafil Ambiyayi Walmursalin
Sayyidina Muhammadin Wa Aalihi
Wasahbiyi Ajmaeen
அகிலங்கள் படைத்து அதனுடன் இருந்து அன்பையும் அருளையும் சொரிந்து அடியார்களை அரவணைக்கும் அகதான அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகட்டுமாக
அகிலங்கள் யாவுக்கும் அருட்கொடையாய் வந்துதித்து அறியாமை இருளினை அடியோடு அகற்றிவிட்டு அறிவென்னும் சுடரினை அற்புதமாக ஏற்றிவிட்டு அறம் ஓங்கும் மதினாவில் அகமதராய் வீற்றிருக்கும் உயிருக்கு உயிரான உயிரினிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அன்னவர்களின் மீது ஸலாமும் ஸலவாத்தும் கூறியவனாக பெர்மிமின் 20ஆம் ஈராண்டு பிரதிநிதிகள் மாநாட்டிற்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.






