பெர்மிமின் மூலம் இந்திய முஸ்லிம் மாணவர்களுக்கு மாஹ்சா பல்கலைக்கழகம் வழங்கும் 2 மில்லியன் மதிப்பிலான கல்வி உதவி

பெட்டாலிங் ஜெயா:

மாஹ்சா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்கும்  கல்வி உதவிக்கு மத சாயம் பூச வேண்டாம்.

அப் பல்கலைக்கழகத்தின் தோற்றுநரும் இணை வேந்தருமான டான்ஸ்ரீ  டாக்டர் முஹம்மத் ஹனிபா இதனை வலியுறுத்தினார்.

பெர்மிம் பேரவைக்கு 2  மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கல்வி உபகார சம்பளத்தை மாஹ்சா பல்கலைக்கழகம் இன்று வழங்கியது.

வசதிக் குறைந்த பி40 மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் இந்த கல்வி உபகரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

மாறாக வசதியுள்ள பணக்கார மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவிகள் கிடைக்காது.

காரணம் இந்த வசதி குறைந்த மாணவர்கள் கல்வி பயில்வதற்கு கல்விக் கட்டணம் செலுத்துவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தடையாக இருக்கக் கூடாது என்பது மாஹ்சா பல்கலைக்கழகத்தின் முதன்மை இலக்காக உள்ளது.

ஆக பெர்மிம் பேரவையும் அதன் தலைவர் ஷேக் ஃபரீதுத்தீனும் இந்த உதவியை நேரடியாக வசதி குறைந்த மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மாஹ்சா பல்கலைக்கழகத்தின் இந்த உதவி பெர்மிம் என்ற இஸ்லாமிய இயக்கத்தின் கூட்டமைப்புக்கு வழங்கியதால் இந்த முயற்சிக்கு யாரும் மத சாயம் பூச வேண்டாம்.

காரணம் மாஹ்சா பல்கலைக்கழகம் இன, மத  பகுபாடின்றி வசதி குறைந்த அனைத்து மாணவர்களுக்கும் உரிய உதவிகளை வழங்கியுள்ளது.

ஆக தூய்மையான முயற்சிகளுக்கு யாரும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று டான்ஸ்ரீ முஹம்மத் ஹனிபா கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இந்திய முஸ்லிம் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மிகப்பெரிய கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்கிய டான்ஸ்ரீ ஹனிபாவிற்கு எங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த கல்வி உதவி தகுதியான மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை பெர்மிம் மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் ஷேக் ஃபரீதுத்தீன் கூறினார்.

Program Santunan Kasih PERMIM (BHR)

Assalamualaikum Wr Wb

Jumma Mubarak and please remember to recite or listen Sura Al-Kahf before Asar Prayer

MOHON SUMBANGAN UNTUK TABUNG SOSIO-EKONOMI PERMIM DAN PROGRAM SANTUNAN KASIH (BHR)

Objektif TABUNG SOSIO-EKONOMI PERMIM ini adalah untuk Merancang Pembangunan Sosio-ekonomi secara komprehensif ke arah ketumbuhan mampan dan inklusif. Selain itu, program Bantuan ini juga akan mengoptimumkan penggunaan sumber kewangan melalui pengagihan peruntukan secara berkesan untuk manfaat komuniti keseluruhan.