
ஷாஅலமில் அமைந்துள்ள ஹோட்டல் டீ பால்மாவில், மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையின் மகளிர் அணி ஏற்பாடு செய்த இந்திய முஸ்லிம் மகளிர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இந்த நிகழ்வில் மூன்று சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மனநல விழிப்புணர்வு, இஸ்லாமிய சிறப்புரை மற்றும் அடிப்படை ஒப்பனை போன்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்கள். அதுமட்டுமின்றி கலந்து கொண்ட 80 மகளிர்கள்,ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, தலைமையுரை ஆற்றிய பெர்மிமின் தலைவர் சகோதரர் ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன், பெரிமின் மகளிர் பிரிவின் இந்த மாபெரும் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். பெர்மிமின் வரலாற்றில் இது ஓர் புதிய அத்தியாயம் என்று கூறினார். பல தடவை பெர்மிமின் மகளிர் பிரிவை புதுப்பிக்க முயற்சி செய்து, அதற்குண்டான பலனை இந்த நிகழ்ச்சியின் மூலம் காண்பதாக சந்தோஷப்பட்டார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மகளிர் பிரிவின் உறுப்பினர்கள், ஜரினா, டத்தின் சப்ரினா மற்றும் ரபிடா ஆகியோரை மனதார பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியை சகோதரி ஜரினா வழிநடத்த, சகோதரி ரபிடா அறிமுக உரையும் மற்றும் டத்தின் சப்ரினா நன்றியுரையும் ஆற்றினார்கள்.

மிகச் சிறப்பாக நடந்த இந்நிகழ்ச்சி தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பெர்மிமின் உறுப்பினர்கள், கலிருஸ்ஸமான், அன்வர் அலி, அப்துல் அலிம், ஷேக் ஜமீல் மற்றும் டத்தோ அப்துல் காதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இந்த வேளையில் பெர்மிமின் தலைவர் நன்றி கூறினார்.

