This program is to to enhance the knowledge and understanding of Al-Quran and Sunnah of our beloved Prophet
இந்திய முஸ்லிம் சமுதாயத்தினர் அஹ்லுல் சுன்னாஹ் வல் ஜமாஅத் உம்மத்தினர் ஆவர். இவர்களிடையே இறைத்தூதர் ரசூலே கரீம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை நாடு தழுவிய அளவில் பள்ளிவாசல்களிலும் மதரஸாக்களிலும் கால காலமாக மௌலூது ஓதி கொண்டாடுவது வழக்கமாகும்.பெரிய நகரங்களில் மீலாது ஊர்வலமாகவும் நடத்தப்படும்.
இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்கள் பின்வருமருமாறு அமைகின்றன :
- நபிகளாரின் பிறப்பை நினைவுபடுத்துவதன் மூலம் அவர்கள் போதித்த இறைவசனங்களான அல்குர்ஆனின் தத்துவங்களை நன்கு ஆழமாக புரிந்துகொள்வது; அத்துடன் நபிகளாரின் சுன்னத் அதாவது அவர்களின் வாழ்க்கை நடைமுறையை அறிந்துகொள்வது ;
- தற்போது நம் சமுதாயம் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள், சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துப் பிரச்சினைகளுக்கு மார்க்கத்தின் அடிப்படையில் எவ்வாறு தீர்வு காண்பது என முடிவெடுப்பது.
- இஸ்லாமோபோபியா என்ற அலையில் இஸ்லாம், அதன் சமுதாயத்தினரை எதிர்மறையாகப் பார்க்கின்றனர். உலகை ஆட்டிப் படைக்கும் தீவிரவாதம், ஐஎஸ், போக்கோ ஹராம் போன்ற இயக்கங்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பாடானவை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகும்.இதன்வழி இஸ்லாம் கூறும் சமூக நீதி, சமத்துவம்,சமாதானம்,நேர்மை ஆகியவற்றை வலியுறுத்தி நம் இளைஞர்களை நேர்வழிக்கு கொண்டு செல்வது.