கல்வி நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பது நன்கு அறிந்த உண்மை. இந்த முக்கியத்துவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு மலேஷிய இந்தோ முஸ்லிம் இளைஞர்களில் நிலைமை இந்தப் பரிந்துரை விளக்குவது மட்டுமின்றி போதுமான கல்வி நிதியை வகுத்து அதற்கான பரிந்துரைகளை பரிகாரங்களைப் பரிந்துரைத்து செயல் முறைக்கு வருமுன்னர் விவாதித்து பரிசீலிக்க முற்படும்.

சரித்திரச் சூழ்நிலை 

16 ஆம் நூற்றாண்டில் மலாக்கா அரசியலில் இந்திய முஸ்லிம்கள் ஆற்றிய பங்கினை நாம் நன்கு அறிவோம். எனினும் கூடுதலான எண்ணிக்கையில் நமது மூதாதையர் இங்கு வர முற்பட்டது 19 நூற்றாண்டில் மத்தியில்தான். அடிப்படையில் பெருபான்மையான இந்திய முஸ்லிம்கள் வணிகர்களே. அவர்கள் மொழி வழியில் மற்ற இந்தியர்களுடனும் நெறியில் மலாய்காரர்களுடனும் ஒன்றிணைந்து வாழ்ந்தனர். இந்த இசைவான நிலை அவர்களின் வர்த்தக வெற்றிக்குப் பெருத்தாவியாயிற்று.

பொதுவாக குடியேறியவர்களில் ஆண்கள் தொகை அதிகமாகவும் தொழிலுக்குத் தொழில் இலகுவாக மாறுவதாகவும் உள்ளது. அவர்கள் சென்ற நாட்டிற்கு விசுவாசம் அரசியல் பற்று அற்றும் இருந்து விட்டதால் வெள்ளிடைமலை. இக்கூற்றுக்கு இந்திய முஸ்லிம்கள் விதிவிலக்கு அல்லர். மலாய் மாநிலங்களில் வலுவான ஒற்றுமை இயக்கம் இல்லாமையாலும் ஆங்கிலேயரின் பிரித்து ஆளும் கொள்கையினாலும் இந்திய முஸ்லிம்களின் நோக்கைக் குறுக்கியதாக தங்களுடைய பூர்வீக எண்ணங்களுக்கு உட்பட்டதாகவே ஆகிவிட்டது.

கல்வித் துறையில் பிற்பட்ட நிலைக்கு இந்த சூழ்நிலைகள் அனைத்தும் எந்த வகைகளில் முக்கியமாக அமைந்தன.

அ. வணிகத் துறையில் முன்னேற்றம் அவர்களின் பிள்ளைகளை அதே வழியைக் கடைப் பிடித்து தொழில் துறையிலேயே சிப்பந்திகளாகக் ஆக்கப்பட்டனர். மேலும் அவர்களின் ஆரம்பக் கல்வி தமிழிலோ அல்லது தமிழிலும் அரபியிலுமாகவோ அமைந்து அத்தகைய கல்வி வியாபாரத் தோதுகளுக்கு போதுமானதாக கருதப்பட்டது.

ஆ. இரண்டு காரணங்களுக்காக ஆங்கிலக் கல்வி அவர்களுக்குத் தேவையற்றதாக கருதப்பட்டது . அவையாவன:

1. அவர்களுடன் வியாபாரத் தொடர்பு கொண்டவர்கள் மலாய்க்காரர்களும் இந்தியர்களுமே

2. மேற்கத்தியக் கல்விமுறை அவர்களின் பண்புகளை இழக்க நேரிட செய்யக்கூடும் என்பது மட்டுமில்லாமல் பெரியவர்களின் கருத்துக்களை எதிர்க்க உபயோகப்படக் கூடும்.

இன்றைய பிரச்சினை

1970 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியர்கள் இந்த நாட்டில் 4 கோடி மக்கள் தொகையில் ஒன்பது விழுக்காடு அளவில் உள்ளனர். இதில் ஏறக்குறைய 90 விழுக்காடு இந்தியத் தமிழர்கள் என்று பிரித்து கூறப்படுகின்றனர். எனினும் இதில் எத்தனை விழுக்காடு இந்திய முஸ்லிம்கள் என்பதைத் திண்ணமாக கூற முடியவில்லை. கூடக் கூட போனால் அவர்களின் தொகை மொத்தக் கணக்கெடுப்பு எண்ணிக்கையில் பத்து விழுக்காடு அல்லது 1,00,000 எனத் தோராயமாக கூறலாம். இக்கூற்றுப்படி மொத்த விழுக்காடு எண்ணிக்கையில் இருபத்து ஐந்து விழுக்காடு தற்போது பள்ளி செல்லும் நிலையில் உள்ளன என்று திட்டமிடுவோமானால் குறைந்தது இருபத்து ஐந்தாயிரம் பிள்ளைகள் பள்ளிகளில் இருக்க வேண்டும். மேலும் இந்தத் தொகையைப் பிரித்துப் பார்போயேமானால் ஏறக்குறைய பதினேழு ஆயிரம் பிள்ளைகள் ஆரம்பக் கல்விக் கூடங்களிலும் 8,600 பிள்ளைகள் நடுநிலைப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும்.

இதையொட்டி எழும் கேள்விகளாவன

அ. இந்த 25,000 பிள்ளைகளும் பள்ளிகளில் இருக்கின்றனரா

ஆ. எத்தனை பேர் பள்ளிக்குச் சென்றனர். பின்னர் பாதியில் முறித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகினர்

இ. பாதியில் படிப்பை முறித்துக் கொள்ளும் இந்தச் செயல் ஆரம்பப் பள்ளிகளிலா அல்லது நடுநிலைப் பள்ளிகளிலா

ஈ. மேற்கூறிய நிலை ஏற்படுவதற்குக் காரணம் யாவை

உ. பள்ளிப் பிள்ளைகளுக்கு படிப்பதற்குத் தகுந்தவாறு விடுதி, சமூகச் சூழ்நிலைகள் உள்ளனவா

ஊ. பெற்றோர்கள் பிள்ளைகளைப் படிப்பில் ஈடுபடுவதற்கு எத்தகைய வழிகளில் ஊக்கமளிக்கின்றனர்

இதற்கான பதில்களை தாம் திறனாய்வு செய்யாவிட்டாலும். அவை நம்மைத் திடுக்கிடவே செய்யும் . அவையாவன

அ. பள்ளிப்பருவம் அடைந்த அனைவரும் பள்ளிக்குச் செல்ல வழி செய்யப்படவில்லை

ஆ. பள்ளிகளில் சேர்ந்த பெரும்பான்மையினர் ஆரம்பப் பள்ளி முடிவிலோ அல்லது எல். சி. இ படியிலோ தொடர முடியாமல் விடப் படுகின்றனர்.

இ. இவ்வாறு கல்வியை அரைகுறையாக விட்டவர்கள் வேலை வாய்ப்பு அற்றுத் திரிகின்றனர். கல்வி சம்பத்தப்பட்ட மற்றும் ஒரு பெரிய பிரச்சினை நம்முடைய கலாச்சார மரபு.